யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான மத்திய பயிற்சி நிலையம்அமைச்சர் . மனுஷ நாணயக்கார

20

மகிந்த ராஜபக்ஷ போன்றோர் கோபுரங்களை நாட்டில் அமைத்தனர். ஆனால் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் என்ற ரீதியில் உயர்வான வருமானத்தை வடக்கு இளைஞர் மற்றும் யுவதிகளும் பெற்றுக்கொள்ளும் வகையில் யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான மத்திய பயிற்சி நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்படும். வடக்கு அரசில்வாதிகளுடன் கலந்துரையாடி அவர்களின் ஒத்துழைப்புடன் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு. மனுஷ நாணயக்கார இன்று (15) யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்கள் தொடர்பில் ,புலம்பெயர் தொழிலாளர் விவகாரங்கள் தொடர்பான சர்வதேச அமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்திய பணிப்பாளர் எமக்கு புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு முழு ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளார். இதனால் மோசடி கும்பலில் சிக்காமல் சட்ட ரீதியல் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்கு வடக்கு இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு செல்ல முடியும். நேற்றைய தினம் இவர்கள் எம்முடன் நிகழ்வில் ஒன்றில் கலந்துகொண்டனர். அப்பொழது அவர்களின் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள Glocal Fair 2023 கண்காட்சி யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு. மனுஷ நாணயக்கார தலைமையில் இன்று(15) ஆரம்பமானது. இதன் போது தேசிய கீதம் தமிழ் மொழியிலும் இசைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய தூதுவர், புலம்பெயர் தொழிலாளர் விவகாரங்கள் தொடர்பான சர்வதேச அமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்திய பணிப்பாளர் Sarah Lou Arriola தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
“என்னால் தமிழில் பேசமுடியவில்லை. இதற்கு என்ன காரணம்? இது குறித்து நான் கவலையடைகின்றேன். உங்களுடன் தமிழில் உரையாட முடியவில்லை ,இது எனது தவறு அல்ல. 1956 ஆம் ஆண்டு முதல் எம்மை பிளவுபடுத்தி வேறுபடுத்திய சந்தர்ப்பவாதிகளினாலேயே இந்த நிலை ஏற்பட்டது. இவ்வாறு செயல் பட்டால் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று இவர்கள் இப்படி செயல்பட்டனர். போதா குறைக்கு இதேகாலப்பகுதியில் தனி சிங்களம் தேசிய மொழி ஆக்கப்பட்டது. இந்த நாட்டு மக்களிடையே பிளவு ஏற்படுவதற்கும் இதுவே காரணம்.இவை அனைத்துக்கும் முன்னைய அரசியல் வாதிகளே காரணம்.இதனால் உங்களுக்கு புரியும் தமிழ் மொழியில் என்னால் ஏன் பேச முடியவில்லை என்பது. இந்த நிலையை மீண்டும் முன்னெடுக்க இவர்களது அரசியல் வாரிகள் முயலுகின்றனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பொதுவாக நான் தேசிய சீருடையை அணிவதில்லை.ஆங்கிலேயே பாணியினாலான சீருடையை அணிவது வழக்கம். இன்று நான் இந்த உடையை அதாவது உங்களது தமிழ் மொழி சலாசார உடையை அணிந்துள்ளேன். உங்களை கௌரவிக்கவும் ,எனது கவலையை வெளிப்படுத்துவதற்காகவே இவ்வாறு இந்த உடையை அணிந்து வந்துள்ளேன் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


நல்லிணக்கம் என்பது பேச்சளவில் மட்டும் இருக்க வேண்டும் என்பது அல்ல கௌரவ ஜனாதிபதியின் நிலைப்பாடு . அது நடைமுறையில் யதார்த்தமாக செயலில் இருக்கவேண்டும் என்பதாகும். அபிவிருத்தி அடைந்துவரும், அபிவருத்திய கண்டுள்ள நாடுகளை நோக்குவோமாயின், அவ்வாறான நா டுகளிலுள்ள மக்கள் அனைவரும் பேதங்களை புறந்தள்ளி அனைவரும் வேறுபாடுகளின்றி செயல்பட்டதால் இன்று வளர்ச்சிக்கண்டுள்ளன. இதற்கு சிறந்த உதாரணம் இந்தியா . அந்நாட்டு மக்கள் அனைவரும் நாம் இந்தியர்கள் என்ற உணர்வுடன் செயல்பட்டதினால் அபிருத்தி கண்டுள்ளனர். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டி எழுப்பும் சமகால அரசாங்கத்தின் அபிவருத்தி பணிக்கு உத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.


“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைப் போன்று நிதானமான முறையில் கருத்துக்களை வெளியிட வேண்டும்.”
“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சட்ட ரீதியாக செல்லுங்கள். ஏமாற்று, மோசடிகாரர்களை நம்பி பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டாம் வெளிநாட்டுக்கு அனுப்பவுதாக சட்டவிரோத நபர்கள் பணமோசடிகள் செய்கின்றனர்” என்றும் அமைச்சர் திரு. மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

Join Our WhatsApp Group