கோழி இறைச்சியின் விலை 200 ரூபாவால் குறைப்பு

18

ஒரு கிலோ கோழியிறைச்சியின் விலை 200 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழியிறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கோழியிறைச்சி ஒரு கிலோ கிராமின் விலை ஆயிரத்து 450 ரூபா வரையில் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை கோழியிறைச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

விலங்குத் தீவனங்களின் விலைகள் குறைவடைந்துள்ளமையால் கோழியிறைச்சியின் விலையும் குறைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group