கொழும்பு – யாழ் ரயில் சேவை ஆரம்பம்

20

கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவை 6 மாதங்களின் பின்னர் இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இடைநிறுத்தப்பட்டிருந்த அநுராதபுரம் – ஓமந்தைக்கு இடையிலான ரயில் மார்க்க போக்குவரத்து, அமைச்சர் பந்துல குணவர்தனவினால், நேற்று முன்தினம் (13) மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டடது.

இதையடுத்து, கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவை இன்று மீள செயற்பட ஆரம்பித்துள்ளது.

அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் மார்க்கத்தின் திருத்தப்பணிகள் காரணமாக, கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல், கொழும்பிலிருந்து, யாழ்ப்பாணத்துக்கான நேரடி ரயில் சேவை இறுதியாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group