தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கலாசூரி இ.சிவ குருநாதனின் இருபதாம் ஆண்டு நினைவை முன்னிட்டு ஐங்கரன் விக்கினேஸ்வரா தொகுத்த “இலங்கை இதழியலில் சிவகுருநாதன்” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 16.07.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது. கொழும்பு
தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலை வகிக்க , பிரதம அதிதியாக லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரிய பீட பணிப்பாளர் சிசிர பரணதந்திரி கலந்து கொள்ளவுள்ளார். இந்நிகழ்வில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் நடராஜா காண்டீபன், ‘ஞானம்’ பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் சாகித்யரத்னா ஞானசேகரன் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தவுள்ளனர்.
தகவல் அறியும் ஜனாதிபதி ஆணைய உறுப்பினர் ஏ.எம்.நாகியா, எழுத்தாளர் முருகபூபதி (ஆஸ்திரேலியா) சிறப்புரை வழங்குவர். தில்லை நடராஜா (மேனாள் கூடுதல் செயலாளர் கல்வியமைச்சு) நூலை அறிமுகம் செய்கிறார். தொடர்ந்து கலை நிகழ்வுகள் நடைபெறும். இறுதியாக கே. பொன்னுத்துரை நன்றியுரையுடன் விழா நிறைவு பெறும். இந்த நிகழ்வுகளை மேமன்கவி தொகுத்து வழங்குவார்.