16 கோடி பேரை வறுமைக்குள் தள்ளிய கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர்

18

கொரோனா தொற்றுநோய், வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் ரஷிய- உக்ரைன் போர் ஆகியவற்றால் உலகின் பல நாடுகளில் 2020 முதல் தற்போது வரை சுமார் 16 கோடி பேர் வறுமைக்கு தள்ளப்பட்டிருப்பதாக ஐ.நா. சபை நேற்று தெரிவித்தது.சுமார் ரூ.160-க்கும் குறைவான ஒருநாள் வருமானத்தில் வாழ்பவர்களை கடுமையான வறுமையில் இருப்பவர்கள் என்றும் ஒரு நாளைக்கு சுமார் 250-க்கும் குறைவான ஒருநாள் வருமானத்தில் வாழ்பவர்களை வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் என்றும் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) எனும் அமைப்பினால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 2020- 2023 ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் 7.5 கோடி மக்கள் கடுமையான வறுமையிலும், 9 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழேயும் வாழ்கிறார்கள்.ஏழைகள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2023-ல் அவர்களின் வருமானம் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்குக் கீழே சென்றிருக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளில் மக்களை வறுமைக்கு செல்லாத வகையில் பாதுகாப்பு வலைகளை உருவாக்குவதில் முதலீடு செய்துள்ள நாடுகள், மக்கள் வறுமையில் விழுவதை கணிசமான எண்ணிக்கையில் தடுத்துள்ளன.ஆனால் மிகவும் கடன்பட்டுள்ள நாடுகளில் அந்நாடுகளின் கடனுக்கும், முறையற்ற சமூக செலவினங்கள் மற்றும் வறுமையின் அதிகரிப்பிற்கும் தொடர்பிருக்கிறது என்று ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம் (UNDP) எனும் அமைப்பின் தலைவர் அச்சிம் ஸ்டெய்னர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Join Our WhatsApp Group