வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 2024 ஆம் ஆண்டு இறுதி வரை 63 ஆக நீட்டிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, அமைச்சின் தேவைக்கேற்ப ஏனைய விசேட சந்தர்ப்பங்களுக்கும் இந்த திருத்தம் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட உபகுழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது .