மோடியை வரவேற்று இந்தியில் டுவீட் செய்த பிரான்ஸ் அதிபர்

64

பிரதமர் மோடி நேற்று அதிபர் மேக்ரான் அளித்த விருந்தில் கலந்து கொண்டார். பிரதமர் மோடிக்கு பிரான்ஸின் உயரிய விருது வழங்கு கவுரவம். இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். நேற்று பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்தில் பங்கேற்றார். பிரான்சில் வசித்து வரும் இந்தியர்களை சந்தித்தார். அந்நாட்டு பிரதமர், செனட்சபை தலைவர் ஆகியோரையும் சந்தித்தார்.

இன்று பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் விழா கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரதமர் மோடி அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மேக்ரான் ”உண்மை மற்றும் நட்பால் உருவான 25 வருட மூலோபாய நட்புறவை இந்தியா- பிரான்ஸ் கொண்டாடி வருகிறது. தற்போது அது இன்னும் வலிமையாவதற்கான நேரம் இது. அன்புற்குரிய மோடி, பாரீஸ்க்கு உங்களை வரவேற்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

Join Our WhatsApp Group