2024 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான ஆலோசனைக் கோவையும் மாதிரி விண்ணப்பமும் வௌியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களை ஒகஸ்ட் 18ம் திகதிக்கு முன்னதாக பாடசாலை அதிபர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது, அதில் குறிப்பிடப்படும் தகவல்களுக்கான தகுதிகளை 2023 ஜூன் 30ம் திகதிக்குள் பூர்த்தி செய்திருக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த ஆலோசனைக் கோவை, மாதிரி விண்ணப்பம் என்பவற்றை www.moe.gov.lk எனும் இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.