பல துறைகளில் சாத்தியமான முதலீடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக சீன தொழில்முனைவோர் குழுவொன்று நேற்று (13) பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரிமாளிகையில் சந்தித்தது. சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் தொழில், ரத்தினம் மற்றும் ஆபரணங்கள், விவசாயம், மருத்துவம், உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பொழுதுபோக்கு தொழில் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடுகளுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் கூறினார்.
Daguowen Culture Co., Ltd. இன் தலைவர், Zhang Qihua, சர்வதேச கலாசார பரிமாற்றம், உலகளாவிய நிலையான அபிவிருத்தி ஊக்குவிப்பு மற்றும் சீனாவில் இருந்து மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் திறன் இலங்கைக்கு இருப்பதாகத் தெரிவித்தார்.
இலங்கைக்கான சீன சுற்றுலாப் பயணிகளை கூட்டாக ஊக்குவிப்பதற்காக Connaissance De Ceylon இன் தலைவர் சந்திரா விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அவர் கூறினார்.
ஜின் மெய் யாங் – Zhejiang சிறந்த பெண்கள் வர்த்தக சம்மேளனத்தின் தலைவி, இலங்கையில் பெண்கள் வலுவூட்டல் திட்டங்களுக்கு உதவ விருப்பம் தெரிவித்தார்.
மனித ஆரோக்கியத்திற்கான மனித கல்லீரல் செல்கள் மற்றும் ரத்தினக் கற்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்பில் பணிபுரியும் மருத்துவ ஆராய்ச்சிக் குழுவான Wuxin குழுமத்தின் தலைவி Xie Yueyu, புற்றுநோயைக் குணப்படுத்த உதவுவதற்காக இலங்கையில் கிளை ஒன்றை அமைப்பதில் ஆர்வமாக இருப்பதாகக் கூறினார்.