சிங்கப்பூரில் இலங்கை மாணவி கராத்தே சாம்பியன் ஷிப் போட்டியில் சாதனை

49

சிங்கப்பூரில் எட்டு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற கராத்தே சாம்பியன் ஷிப் – 2023 போட்டியில் இலங்கை வீராங்களை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளனர்.

கம்பஹா, மிரிஸ்வத்த, கெப்பிட்டிபொல உயர்தரப் பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் ஷெனுஷி தமாஷா என்ற மாணவியே இவ்வாறு 15 வயதுக்குட்பட்ட போட்டியில் தங்கப்பதக்கத்தையும் மற்றுமொரு போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுள்ளார்.

இந்த மாணவி, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பயிற்சியாளர் தனுகா பியூமல் வழிக்காட்டலில் இலங்கையில் நடைபெற்ற போட்டியிலும் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.இம்மாணவி இலங்கைக்கு மட்டுமின்றி கெப்பிட்டிபொல கல்லூரிக்கும் பெறுமையை பெற்றுத்தந்தமைக்காக கல்லூரியின் அதிபர் சாந்தி விஜேசூரிய தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றுள்ளது.

Join Our WhatsApp Group