கடுகன்னாவ மலையில் நடைபயணம் மேற்கொண்ட டென்மார்க் பெண் சடலம் மீட்பு

61

கடுகன்னாவ – அழகல்ல மலை பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட போது காணாமல் போனதாக கூறப்படும் 32 வயதுடைய டென்மார்க் பெண்ணின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (ஜூலை 10) முதல் குறித்த பெண் காணாமல் போனதையடுத்து, பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் நேற்று தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர்.

இதடிடையே, டேனிஷ் எனப்படும் குறித்த பெண், மலையில் நடைபயணம் மேற்கொண்ட போது தவறி விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், ஜூன் 26ஆம் திகதி நாட்டிற்கு வந்த பெண் தனியாக சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார் எனவும் அவர் ஜூலை 10ஆம் திகதி கண்டி பேக் பேக்கர்ஸ் விடுதிக்கு சென்றதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தான் உல்லாசமாக செல்வதாக விடுதி நிர்வாகத்திடம் கூறியதாகவும், கடந்த செவ்வாய்க்கிழமை (11) இரவு விடுதிக்கு திரும்பாததையடுத்து, நிர்வாகம் கண்டி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், குறித்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group