நடிகர் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை ஊடாக வேறு நாடு ஒன்றுக்கு செல்வதற்காக சில மணி நேரம் ரஜினிகாந்த் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கி இருந்துள்ளார்.

இந்தியாவின் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் விமானத்தில் இன்று முற்பகல் 11.30 அளவில் கட்டுநாயக்கவுக்கு வந்த ரஜினிகாந்தை விமான நிலையத்தின் சிறப்பு அதிதிகள் முனையத்திற்கு அழைத்து விசேட வரவேற்பும் அளிக்கப்பட்டுள்ளது.