ONMAX DT இயக்குநர்கள் குழுவின் கணக்குகளில் இருந்த 80 கோடி குறித்து விசாரணை

51

பிரமிட் திட்டங்களை இயக்குவதாக குற்றம் சாட்டப்பட்ட ONMAX DT (PVT) LTD இன் இயக்குநர்கள் குழுவின் கணக்குகளில் 80 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (12) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் எழுத்துமூலமாக செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதன் பிரகாரம் 5 உறுப்பினர்களின் கணக்குகளில் பணம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

கஹந்தவ ஆரச்சிலகே அதுல இந்திக்க சம்பத், சிங்கள பேடிகே கயாஷான் அபேரத்ன, லெந்துவகே சம்பத் சந்தருவன், கலபட விதான ஆராச்சிலகே சாரங்க ரந்திக ஜயதிஸ்ஸ, மல்லவ அப்புஹாமிலாகே தனஞ்சய ஜயான் ஆகியோரின் கணக்குகள் இவை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

ஆனால், குறித்த நிறுவனத்தின் கணக்கில் கணிசமான பண இருப்பு இல்லை என்று தெரிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

Join Our WhatsApp Group