13ம் திருத்தத்தை தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாது – ஜோதிலிங்கம்

53

13ம் திருத்தத்தினை ஒருபோதும் தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாது என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், 13-ஆம் திருத்தச் சட்டம் என்பது ஓர் அரசியல் தீர்வு அல்ல என குறிப்பிட்டார்.

தற்போது உள்ள அரசியல் கட்சிகளை சேர்ந்தோர் தம்மால் இயலாத நிலையிலையே 13ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற நிலைக்கு வந்துள்ளார்கள்.

ஆனால் 13ம் திருத்தச் சட்டம் என்பது இந்தியாவும் இலங்கையும் எடுத்துக்கொண்ட தீர்வேதவிர அது தமிழ் மக்களுக்கான தீர்வு அல்ல.

எனவே குறித்த சட்டம் ஒருபோதும் தமிழ் மக்களுக்கான தீர்வாக அமையாது என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான ஜோதிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

Join Our WhatsApp Group