போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சமீப காலமாக தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
தென் ஆப்பிரிக்காவின் ஈஸ்ட் கேப் மாகாணம் குவானோ புஹ்லே நகரில் ஒரு வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் ஒரு பெண் உள்பட 6 பேர் பலியானார்கள். 4 பேர் காயம் அடைந்தனர்.
பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சமீப காலமாக தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.