நடிகர் வைரமுத்து இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
வைரமுத்துவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தினார்.
கவிஞர் வைரமுத்து இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெசன்ட் நகரில் உள்ள வைரமுத்துவின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதை பார்த்து கொந்தளித்த பாடகி சின்மயி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “பல பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஒரு மனிதனின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர். பல விருதுகளை பாடகியான நான் MeToo இயக்கத்தின் மூலம் இந்த கவிஞர் மீது பாலியல் புகார் தெரிவித்ததற்காக, 2018-ம் ஆண்டு முதல் தமிழ் திரைத்துறையில் பணியாற்ற முடியாத தடையை எதிர்கொண்டிருக்கிறேன்.
பல தசாப்தங்களுக்கு முன்னர் பிறந்த தவறான நடத்தை கொண்ட அந்த கவிஞர், எந்தப் பெண்ணின் மீதும் கை வைக்கலாம் என்று முடிவு செய்தார், பல அரசியல்வாதிகளுடன் குறிப்பாக திமுகவுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தால் சம்பந்தப்பட்ட பெண்களை அச்சுறுத்தினார். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பெண்களின் பாதுகாப்புக்காக பேசுவதாக கூறுவது அவமானம். வைரமுத்துவைப் பற்றி பேச்சு எழும்போதெல்லாம் அவர்கள் அனைவரும் அமைதியாகிவிடுவார்கள்.