சமையல் எரிவாயுவின் விலை சுமார் ஒரு மாதத்தில் 1500 ரூபாவால் குறைந்துள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்ட உணவகங்கள் உணவு பண்டங்களின் விலைகளை குறைக்காமல் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கும் பெரும்பாலான உணவகங்கள் எரிவாயு விலை அதிகரிப்பை காரணம் காட்டி உணவுப் பண்டங்களின் விலையை திடீரென அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மதிய சைவ உணவு ஒரு பொதி 600 ரூபாவாகவும் அசைவ உணவு 1000 ரூபாவாகவும் மற்றும் ரோல்ஸ் ஒன்றின் விலை 100 ரூபாய் என அனைத்து உணவு பண்டங்களின் விலைகளும் அதிகரித்துள்ளது.
சமையல் எரிவாயுவின் விலையானது 5000 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்ட போது உணவகங்கள் உணவு பண்டங்களின் விலைகளை உடனடியாக அதிகரித்தன.
தற்போது சமயல் எரிவாயுவின் விலையானது குறைக்கப்பட்டுள்ள போதும் ஏன் உணவகங்கள் உணவு பண்டங்களின் விலையை குறைக்கவில்லை என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.