குளிர்சாதன பெட்டி வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழப்பு!

28

பாகிஸ்தான் நாட்டில் வீட்டில் வைத்திருந்த குளிர்சாதன பெட்டி திடீரென வெடித்து சிதறியதில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப்பின் தலைநகராக லாகூரில் உள்ள நூர் மெகல்லா பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நூர் மெகல்லாவில் உள்ள வீட்டில் கூட்டு குடும்பம் ஒன்று வசித்து வந்த நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் அந்த கட்டிடத்தில் பயங்கர சத்ததுடன் தீ விபத்து நடந்துள்ளது.மளமளவென தீப்பிடித்து எரிந்ததில் அந்த இடத்தை கரும்புகை சூழ்ந்தது.

இதனால் அப்பகுதியினர் அச்சமடைந்தனர்.இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தீயணைப்பு படையினருடன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.தண்ணீரை தரையை பயன்படுத்தி கட்டிடத்தில் பரவி இருந்த தீயை போராடி அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீப்பிடித்ததில் உருவான கரும்புகையை சுவாசித்ததால் குடும்ப உறுப்பினர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிரமப்பட்டுள்ளனர்.மேலும் கனநேரத்தில் முழுவதுமாக வீடு தீப்பிடித்து எரிந்ததில் உள்ளே இருந்த 7 மாத குழந்தை, 5 சிறுவர்கள் உள்பட 10 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Join Our WhatsApp Group