குடும்பத்தில் 9 பேருக்கும் ஒரே தேதியில் பிறந்தநாள்- கின்னஸ் சாதனை படைத்த பாகிஸ்தான் குடும்பம்

20

பாகிஸ்தானின் லர்கானா பகுதியை சேர்ந்தவர் அமீர் அலி. இவரது மனைவி குதேஜா. இவர்களுக்கு 19 முதல் 30 வயதுடைய 7 குழந்தைகள் உள்ளனர். இதில் பெண் இரட்டையர்கள், ஆண் இரட்டையர்களும் அடங்குவர். இவர்கள் 9 பேருக்குமே பிறந்த தேதி ஒரே நாளாகும். அதாவது ஆகஸ்ட் 1-ந் தேதி அன்று இந்த 9 பேருமே பிறந்துள்ளனர்.இது உலக சாதனையாக மாறி இருப்பதாக கின்னஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்பு அமெரிக்காவில் கம்மின்ஸ் என்பவரது குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் இந்த சாதனையை வைத்திருந்தனர். அவர்கள் பிப்ரவரி 20-ந் தேதி பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

அமீர் அலி- குதேஜாவின் திருமண நாளும் ஆகஸ்ட் 1 என்பது கூடுதல் சிறப்பாகும். இவர்கள் 1991-ம் ஆண்டு தங்களது பிறந்தநாள் அன்று திருமணம் செய்து கொண்டனர். மறுவருடம் ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் குழந்தையான சிந்து பிறந்துள்ளார். அடுத்தடுத்த குழந்தைகள் பிறப்பும் ஆகஸ்ட் 1-ந் தேதியாக இருந்ததை கடவுளின் பரிசு என்று தம்பதியினர் கூறினார்கள்.

Join Our WhatsApp Group