இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புதிய பேருந்துகள் கொழும்பில் வைத்து உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (13) யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
வடக்கு மாகாணத்தில் ஓவ்வொரு மாவட்டங்களிலும் போக்குவரத்தினை இலகுபடுத்த இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் புதிய பேருந்துகள் கடந்த வாரம் வழங்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் வவுனியா 4, யாழ்ப்பாணம் 4 ,கிளிநொச்சி 4, மன்னார் 3, முல்லைத்தீவு 3, பருத்தித்துறை 3, காரைநகர் 3 என 24 பேருந்துகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் அவை இதுவரை போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வழங்கப்பட்ட பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தாமல் இன்றைய தினம் மீண்டும் விழா எடுத்து பேருந்துகளை கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தி்ல் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் வழங்கப்பட்ட ஒவ்வொரு பேருந்துக்கும் நாள் ஒன்றிற்கு ரூ. 5000 செலுத்தப்பட வேண்டும். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு மேலாக பயன்பாட்டில் இல்லாத பேருந்துகளின் குத்தகை பணத்தினை எவ்வாறு செலுத்த முடியும் என்பதோடு கையளிக்கப்பட்ட பேருந்துகளுக்கு மீண்டும் ஒரு விழா அவசியமா? என்கின்ற கேள்வி எழுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.