ஆடைகள், காலணிகளைப் பழுதுபார்த்துத் தருவோருக்கு ஊக்கத்தொகை வழங்கும் பிரஞ்சு அரசாங்கம்

18

பிரான்சில் வரும் அக்டோபர் மாதத்திலிருந்து ஆடைகள், காலணிகளை வீசாமல் பழுதுபார்த்துத் தருபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது பிரான்சில் ஆண்டுதோறும் 700,000 டன் ஆடைகள் வீசப்படுகின்றன.அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு குப்பை நிரப்புமிடங்களில் குவிகின்றன.காலணியின் குதிகால் பகுதியைப் பழுதுபார்க்க வாடிக்கையாளர்களுக்கு 7 யூரோ வழங்கப்படும்.ஆடைகளைச் சரிசெய்து தருவோர் 10இலிருந்து 25 யூரோ வரை பெறலாம்.

இவ்வாண்டு முதல் 2028ஆம் ஆண்டு வரை இந்தப் புதிய நடைமுறைக்குக் கைகொடுக்க 154 மில்லியன் யூரோ கொண்ட நிதி அமைக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group