உலக நாடுகளில் பாதிக்கும் மேல் 2030ஆம் ஆண்டில் அவற்றின் வளர்ச்சி இலக்கை அடைய முடியாமல் போகலாம் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறியிருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி 2030ஆம் ஆண்டில் 575 மில்லியன் பேர் வறுமையில் இருப்பர்.சுமார் 20 விழுக்காட்டு நாடுகளின் மக்கள் மட்டுமே உயர்நிலைக் கல்வியைத் தொடர வாய்ப்பு இருக்கும் என்று முன்னுரைக்கப்படுகிறது.84 மில்லியன் பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்குச் செல்ல முடியாமல் போகலாம்.
அடுத்த 30 ஆண்டுகளில் 2 பில்லியன் மக்கள் சேரிகளில் அல்லது சேரியைப் போன்ற பகுதிகளில் வாழ வேண்டிய நிலை ஏற்படலாம்.குழந்தைத் திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்னும் குறைந்தது 300 ஆண்டுகள் ஆகலாம் என்று நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
உறுப்பு நாடுகளிடமிருந்து புதுப்பிக்கப்பட்ட அரசியல் ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் நிறுவனம் செப்டம்பர் 18ஆம் தேதி மாநாட்டை நடத்தவுள்ளது.போராடும் நாடுகள் அவற்றின் இலக்கை அடைய உதவுவதற்காக 2030க்குள் ஆண்டுக்கு மேலும் 500 பில்லியன் டாலர் நிதி திரட்ட முடியும் என நிறுவனம் நம்புகிறது.