ஹேரி கேன்னுக்கு 400,000 பவுண்ட் வாரச் சம்பளம் வழங்கத் தயாராகும் டோட்டன்ஹாம்

16

டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்(Tottenham Hotspur) காற்பந்து அணி ஹேரி கேனுக்கு (Harry Kane) 400,000 பவுண்ட் வாரச் சம்பளம் வழங்கத் தயாராகிறது.அணியில் கேனின் தற்போதைய ஒப்பந்தம் இந்தப் பருவ இறுதியுடன் முடிகிறது.

29 வயது கேன் தனிப்பட்ட சில வெற்றிகளைத் தவிர, டோட்டன்ஹாமுக்கு இதுவரை எந்தவொரு முக்கியமான கிண்ணத்தையும் வென்று கொடுக்கவில்லை.இந்நிலையில், இங்கிலாந்து கேப்டனான கேனின் நிலவரம் குறித்து பாயர்ன் மியூனிக் (Bayern Munich), PSG, மென்செஸ்ட்டர் யுனைட்டட் (Manchester United) ஆகிய அணிகள் உற்றுக் கவனித்து வருகின்றன.

பாயார்ன் ஏற்கெனவே கேனுக்கு 2 முறை அழைப்பு விடுத்தது. ஆனால் அவரை விட்டுத் தர முடியாது என்று கூறி அந்த 2 அழைப்புகளையும் நிராகரித்துவிட்டது டோட்டன்ஹாம்.

Join Our WhatsApp Group