தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் “Glocal Fair 2023” என்ற நடமாடும் சேவை எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இதனுடன் இணைந்ததாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் கீழ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் சென்று சட்டவிரோதமாக ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புதல் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பருத்தித்துறை அலவி, யாழ்ப்பாணம், குருநகர் போன்ற பகுதிகளில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கான வசதிகளுடன் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அனைத்து சேவைகளையும் சமகால அரசாங்கம் வடக்கு, தெற்கு என்ற பாகுபாடு இல்லாமல் சமமாக நடத்துகிறது என்ற செய்தியை முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் “Glocal Fair 2023” அமைச்சின் நடமாடும் சேவை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முகப்பு வேலைவாய்ப்பு யாழ்ப்பாணத்தில் “Glocal Fair 2023” 15-16 வரை : வேலை வாய்ப்பு பணியகமும் களத்தில்