பிரான்ஸிடம் இருந்து கடற்படைப் போர்விமானங்களை வாங்கவிருக்கும் இந்தியா

13

இந்தியா பிரான்ஸிடம் இருந்து 3 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்புடைய கடற்படைப் போர் விமானங்களை வாங்கவிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி இவ்வாரம் பாரீஸுக்குச் (Paris) செல்லும்போது உடன்பாடு கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியா தொடர்ந்து வரிசையாகத் தற்காப்பு உடன்பாடுகளைச் செய்துவருகிறது.தெற்காசிய வட்டாரத்தில் அதன் ராணுவ வலிமை மேம்படுத்தப்படுகிறது.

சுமார் 36 போர் விமானங்களை பிரான்ஸிடம் இருந்து இந்தியா வாங்கப் போவதாக மூத்த அதிகாரிகள் கூறினர்.இந்தியா கடைசியாக 2015ஆம் ஆண்டில் போர் விமானங்களை வாங்கியது.பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (13 ஜூலை) பாரீஸுக்குச் செல்கிறார்

Join Our WhatsApp Group