ஒரேபாலின திருமணத்திற்கு அனுமதி வழங்கிய நேபாளம்!

22

தெற்காசியாவில் LGBTQ+ மக்களுக்கான திருமண சமத்துவத்திற்கான முதல் படியாக, ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக பதிவு செய்ய நேபாள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய சட்ட கட்டமைப்பை உருவாக்கும் வரை ஒரே பாலின மற்றும் பாரம்பரியமற்ற தம்பதிகள் தற்காலிகமாக பதிவு செய்யப்பட வேண்டும் என நீதிபதி டில் பிரசாத் ஷ்ரேஸ்தா தீர்ப்பளித்தார்.

அதேவேளை பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் ஒருபாலின திருமணத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.இந்நிலையில் தெற்காசியாவில் ஓரினச்சேர்க்கை திருமணங்களை அங்கீகரித்த முதல் நாடாக நேபாளம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group