எட்டு கிலோ தங்கத்துடன் இருவர் கைது

77

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக எடுத்துச் செல்ல முற்பட்ட 08 கிலோ 450 கிராம் தங்கத்துடன் சந்தேகநபர்கள் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி – வன்னிமுந்தலம் கலப்பு பகுதியில் கடற்படையினர் இன்று (12) காலை விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

அங்கு கற்பிட்டி கடற்பகுதியை நோக்கி சந்தேகத்திற்கிடமான வகையில் டிங்கி படகு ஒன்று பயணிப்பதை கடற்படையினர் அவதானித்து சோதனையிட்டனர்.

இதன்போது டிங்கி படகில் சூட்சுமமாக மறைத்து சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் நான்கு பொதிகளில் பொதி செய்யப்பட்ட தங்கம் கடற்படையினரால் இவ்வாறு கைப்பற்றப்பட்டது

Join Our WhatsApp Group