ஆஸ்திரேலியாவில் பல மில்லியன் மரங்களை உலுக்கும் மர்ம நோய்

13

ஆஸ்திரேலியாவின் பல மில்லியன் மரங்களை உலுக்கிக்கொண்டிருக்கிறது ஒரு மர்ம நோய்.அதற்குத் தீர்வுகாணும் முயற்சியில் இறங்கி வெற்றி கண்டுள்ளனர் பெர்த் (Perth) ஆய்வாளர்கள்.

மரங்கள் நம் வாழ்வின் வரங்கள்.அப்படிப்பட்ட மரங்களை ‘Chlorotic Decline Syndrome’^ எனப்படும் ஒருவகை நோய் பாதித்துள்ளது.இந்த நோய் ஏற்படும்போது மரங்களில் இலைகளின் நிறம் மஞ்சளாக மாறி இலைகள் மரங்களிலிருந்து உதிர்ந்துவிடுகின்றன.இந்த நோய் முதன்முதலில் 2003ல் தோன்றியது.நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு மரங்களுக்குப் பாய்ச்சுப்படும் தண்ணீர்த் தரத்தின் மாற்றமே அந்த நோய்க்குக் காரணம் என ஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.

1990கள்முதல் தண்ணீரால் இரும்புக்கறை படிவதைத் தடுக்க ஆழ்துளை நீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.அதனால் மண்ணின் அமிலத்தன்மை மரங்களுக்கு ஏற்றதாக இல்லை.தேவையான ஊட்டச்சத்தையும் மரங்கள் பெறமுடியாமல் போனது.

மரங்களுக்கு நிகழ்ந்த பாதிப்புக்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது பெரும் சவாலாய் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறினர்.இதற்குத் தீர்வாக மண்ணின் அமிலத்தன்மையைச் சரிசெய்ய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

Join Our WhatsApp Group