அரசாங்க மருத்துவமனைகளில் பெரும்பாலான சிடி ஸ்கானர்கள் செயல் இழந்துவிட்டன என மருத்துவதுறை சார்நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்க மருத்துவமனைகளில் 44 சிடி ஸ்கான் இயந்திரங்கள் உள்ளன என அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 12 சிடி ஸ்கான் இயந்திரங்கள் உள்ளன,குருநாகல் கராப்பிட்டிய திருகோணமலை அம்பாந்தோட்டை பதுளை இரத்தினபுரி களுத்துறை ஹொரன தேசிய பல்வைத்தியசாலை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை மாத்தறை ஆகிய மருத்துவமனைகளில் சிடி ஸ்கானர்கள் இயங்கவில்லை என அந்தஅமைப்பு தெரிவித்துள்ளது.
சில மருத்துவமனைகளில் சிடி ஸ்கானர்கள் பல மாதங்களாக இயங்கவில்லை
இதனால் வறியமக்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் அவர்களால் தனியார் மருத்துவமனைகளிற்கு செல்ல முடியாது.இதன் காரணமாக அரசாங்கம் இந்த இயந்திரங்களை திருத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த இயந்திரங்கள் இயங்க மறுத்துள்ளதால் சில நோய்களை அடையாளம் காண்பதில் மருத்துவர்களும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் இதனால் குழப்பங்கள் ஏற்படுகின்றன என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.