அமெரிக்காவின் 48 மாநிலங்களை 2 நாளில் கடந்து சாதனை படைத்த தோழர்கள்

26

விமானிகளாகப் பணிபுரியும் 2 நண்பர்கள் கின்னஸ் உலகச் சாதனையைப் படைத்துள்ளனர்.அமெரிக்காவில் உள்ள 48 மாநிலங்களை விமானம் வழி1 நாள், 14 மணி நேரம், 13 நிமிடங்களில் கடந்ததாக NDTV தெரிவித்தது.ஜான் ஸ்கிட்டோனும் (John Skittone) ராபர்ட் ரேனொல்ட்சும் (Robert Reynolds) மே 17ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை பயணம் செய்து சாதனை புரிந்தனர்.

இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் தரையிறங்கி மீண்டும் உடனடியாகப் புறப்பட்டதாக NDTV தெரிவித்தது.இரு மாநிலங்களுக்கு இடையே ஆகக் குறுகிய தூரம் சுமார் 4 நிமிடங்கள் என்று ஸ்கிட்டோன் கூறினர்.சாதிக்கவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றுவது, விமானப் போக்குவரத்தை ஊக்குவிப்பது, விமானத்தில் பயணம் செய்வது சுலபம் என்பதைக் காட்டுவது,

மற்றவர்களிடையே பயணம் செய்வதை ஊக்குவிப்பது போன்ற காரணங்களுக்காகச் சாதனையில் இறங்கியதாக இருவரும் கூறினர்.

Join Our WhatsApp Group