(12.07.2023) இன்றைய ராசி பலன்கள்

17

மேஷம்

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். குழந்தைகளின் விஷயங்களில் அலட்சியமின்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவு எடுப்பதை தவிர்க்கவும். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : புரிதல் மேம்படும்.

பரணி : வாதங்களை தவிர்க்கவும்.

கிருத்திகை : ஆதரவான நாள்.

ரிஷபம்

குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதரர்களின் வழியில் சிறு சிறு சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வீட்டினை சீரமைத்து விரிவுபடுத்துவீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த சில வழக்குகளில் தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சாந்தம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

கிருத்திகை : சங்கடங்கள் நீங்கும்.

ரோகிணி : தெளிவு ஏற்படும்.

மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்

பிறமொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்களின் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : ஆதாயம் உண்டாகும்.

திருவாதிரை : சாதகமான நாள்.

புனர்பூசம் : மனப்பக்குவம் ஏற்படும்.

கடகம்

அரசு சார்ந்த காரியங்களில் துரிதம் உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய தொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமை திறன் மேம்படும். விருத்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : துரிதம் உண்டாகும்.

பூசம் : ஆதரவு கிடைக்கும்.

ஆயில்யம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

சிம்மம்

திட்டமிட்ட காரியங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பழைய நண்பர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தந்தை வழியில் உதவி கிடைக்கும். திடீர் திருப்பங்களின் மூலம் மாற்றம் பிறக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

மகம் : முடிவு கிடைக்கும்.

பூரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

உத்திரம் : மாற்றம் பிறக்கும்.

கன்னி

எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதளவில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். செயல்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனம் வேண்டும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

உத்திரம் : பயணங்கள் உண்டாகும்.

அஸ்தம் : நிதானத்தை கடைபிடிக்கவும்.

சித்திரை : வாதங்களை தவிர்க்கவும்.

துலாம்

மனம் விரும்பிய சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட கால பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். கலைப் பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். வெளிவட்டார தொடர்பு மேம்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உழைப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

சித்திரை : மகிழ்ச்சி உண்டாகும்.

சுவாதி : ஆர்வம் ஏற்படும்.

விசாகம் : சுறுசுறுப்பான நாள்.

விருச்சிகம்

சொத்து சார்ந்த வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்திருந்த சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : சாதகமான நாள்.

அனுஷம் : மாற்றம் உண்டாகும்.

கேட்டை : முன்னேற்றமான நாள்.

தனுசு

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். மனதளவில் புதிய தேடல் உண்டாகும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈர்ப்பு அதிகரிக்கும். சிக்கல்கள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

மூலம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

பூராடம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

உத்திராடம் : தேடல் உண்டாகும்.

மகரம்

அரசு சார்ந்த பணிகளில் துரிதம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். மனைவி வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனவள கலையில் நாட்டம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் மரியாதை அதிகரிக்கும். குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பயணங்களின் மூலம் எண்ணங்கள் ஈடேறும். பாராட்டுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : துரிதம் உண்டாகும்.

திருவோணம் : ஒத்துழைப்பு ஏற்படும்.

அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.

கும்பம்

நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறைகளால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பூர்வீக வீட்டை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

சதயம் : காரியங்கள் கைகூடும்.

பூரட்டாதி : முயற்சிகள் மேம்படும்.

மீனம்

அனுபவங்களின் மூலம் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். தனவரவுகளின் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். வேடிக்கையான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். விரயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : அறிமுகம் ஏற்படும்.

உத்திரட்டாதி : சோர்வு குறையும்.

ரேவதி : மதிப்பு அதிகரிக்கும்.

Join Our WhatsApp Group