வேட்டையாடு விளையாடு வெற்றி.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

16

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் வேட்டையாடு விளையாடு.
இப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006-ம் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதில் ஜோதிகா, கமலினி முக்கர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ரவி வர்மன் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் அன்றைய சினிமா சூழலில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. வேட்டையாடு விளையாடு படம் ஜூன் 23ம் தேதி திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆனது. சென்னையில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகள் நிறைந்து வந்தது.

இந்நிலையில், வேட்டையாடு விளையாடு படத்தின் மறு வெளியீட்டு வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்த நிகழ்வில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Join Our WhatsApp Group