மன்னம்பிட்டி விபத்து: ஏறாவூரில் 3 ஜனாசாக்கள் நல்லடக்கம்

41

பொலநறுவை மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இவைகளில், மட்டக்களப்பு,ஏறாவூர் பிரதேசத்தினைச் சேர்ந்த பெண்ணொருவர் உட்பட மூவரின் ஜனாசாக்கள் உரியவர்களின் இல்லங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து ஜனாசாக்கள் ஏறாவூர் நூரூஸ்தலாம் பள்ளிக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு பிரார்த்தனை செய்யப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டன.

இதன்போது ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த பெருமளவான மக்கள் அங்கு சமூகமளித்திருந்ததுடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஷாகீர் மௌலானாவும் கலந்துகொண்டு உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார்.

Join Our WhatsApp Group