பெட்ரோலிய உரிமம் வழங்கல் தொடர்பான புதிய நிபந்தனைகள் வர்த்தமானியில்

27

பெட்ரோலிய உற்பத்தி உரிமம் வழங்குவது தொடர்பான உத்தரவுகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

பெட்ரோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ், குறித்த விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் இது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, அனுமதிப்பத்திரம் வழங்கும் போது அமைச்சின் செயலாளரிடம் அதிகாரத்தை வழங்குவதற்கு பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வர்த்தமானியின் படி, ஒரு விண்ணப்பதாரர் நாட்டிற்குள் பெட்ரோலியத்தை இறக்குமதி செய்ய, ஏற்றுமதி செய்ய, விற்க, வழங்க அல்லது விநியோகிக்க முன்வந்தால், அது கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இருக்க வேண்டும் மற்றும் முதலீட்டு வாரியத்தின் உத்தரவுகளுக்கு இணங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group