பிள்ளை பெறுவதற்காக தேவாலய மந்திர நீரை அருந்திய இளம் பெண் மரணம்

76

பிள்ளை பாக்கியம் இல்லை என்ற காரணத்துக்காக தேவாலயத்தில் வழங்கப்பட்ட மந்திர நீரை அருந்திய இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் டீ.பீ தில்மி சந்துணிக்கா விஜேரத்ன என்ற 23 வயதான இளம் பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை என்ற காரணத்தால் தன்னுடைய தந்தையின் உறவினர் ஒருவர் நடத்துகின்ற தேவாலயம் ஒன்றில் கடந்த மூண்டு நாட்களாக நாட்டு மாந்திரீக மருந்தொன்றை அருந்தி வந்துள்ளார்.

விட்டமின் மருந்து என்ற வகையில் அந்த பெண் இந்த மருந்தை அருந்திவந்துள்ள நிலையில் குறித்த பெண்ணுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக ஜயந்திபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பொழுதே குறித்த இளம் பெண் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group