நடிகரும், சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் கைது

83

நடிகரும், சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சண்டை பயிற்சியாளராக இருப்பவர் கனல் கண்ணன்.

இவர் பல படங்களில் நடிகராகவும் தோன்றியுள்ளார்.

இந்து மக்கள் கட்சியை சேர்ந்த கனல் கண்ணன் கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக திமுகவைச் சேர்ந்த ஜோசப் பெனடிக்ட் என்பவர் புகாரளித்தார்.

புகாரையடுத்து கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து கனல் கண்ணனை காவல்துறையினர் நாகர்கோவிலில் உள்ள 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

இதனிடையில் எந்த பிரச்சினை வந்தாலும் அதனை சட்டரீதியாக சந்திப்பேன் என கனல் கண்ணன் கூறியுள்ளார்.

Join Our WhatsApp Group