சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிர்ப்பு: மட்டக்களப்பிலும் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

70

(கனகராசா சரவணன் )

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நீதிபதிகளை எச்சரித்து வெளியிட்டுள்ள கருத்தைக் கண்டித்து மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை (11) பணி பஷ்கரிப்பில் ஈடுபட்டு மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த தில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் நீதிபதிகளை எச்சரித்து தெரிவித்த கருத்தை கண்டித்து மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்க தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி பேரின்பம் பிறேம்நாத் பணிபஸ்கரிப்புக்கு அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்;து இன்று காலை 9 மணிக்கு மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்னால் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சட்டத்தரணிகள் மற்றும் மட்டு நீதிமன்ற கட்டிடத் தொகுதி சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் நீதித் துறை சுதந்திரத்திற்காய் குரல்கொடுப்போம், நீதித்துறை சுதந்திரத்தை உறுதி செய், நீதிதுறைக்கு அரசியல் தலையீடு வேண்டாம்.

நீதித்துறையின் சுதந்திரமே ஜனநாயகத்தின் தூண் ஆகும், நீதித்துறையில் இனவாதத்தை கலக்காதே, போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு சுமார் ஒரு மணித்தியாலம் கண்டன ஆர்பட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Join Our WhatsApp Group