சதொசவின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு அங்கீகாரம்

9

கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் அல்லது சதொசவின் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகளை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சதொச நிறுவனம் பொருளாதாரத்திற்கு வினைத்திறனாக பங்களிக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சதொச நிறுவனத்தின் மறுசீரமைப்பு மற்றும் உத்தேச மறுசீரமைப்பு செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு செயற்பாட்டு மற்றும் கண்காணிப்புக் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ முன்வைத்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group