உலக வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!

23

உலகின் மிக வெப்பமான வாரம் இதுதான் என உலக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அதன்படி ஜூலை முதல் வாரத்தை உலகின் மின வெப்பமான வாரமாக உலக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து உலக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டிய நிலையில், ஜூலை மாதமும் அது தொடர்வதாகவும், பூமியின் சராசரி வெப்பம் ஜூலை முதல் வாரத்தில் உச்சபட்ச அளவு பதிவானதாகவும் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக கடந்த ஜூலை 4ஆம் தேதி பூமியின் சராசரி வெப்பநிலை 62 புள்ளி 7 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானதாக குறிப்பிட்டுள்ளது.நிலத்தில் மட்டுமின்றி கடலிலும் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை உயர்ந்ததாகவும், இது சுற்றுச்சூழலிலும், சூழலியல் மாற்றத்திலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் எல் நினோ மற்றும் புவி வெப்பமயமாதல் ஆகியவை வெப்பநிலை உயர்வுக்கு காரணமாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.இது ஏற்கனவே வறட்சியில் உள்ள ஸ்பெயின் நாட்டை மேலும் மோசமாக்கும் எனவும், அமெரிக்கா மற்றும் சீனாவிலும் வெப்ப அலைகள் ஏற்பட்டுள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Join Our WhatsApp Group