நீண்ட தூர பேருந்துகளுக்கான நேர அட்டவணையை பயணிகள் எளிதாகக் கண்டறியும் வகையில் இலங்கை போக்குவரத்துச் சபை செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் ‘sltb.eseat.lk‘ என்ற செயலி அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.
இந்த செயலியானது இலங்கை போக்குவரத்து சேவையின் கீழ் இயங்கும் அனைத்து பேருந்துகளும் பயணிக்கும் நேர அட்டவணை பார்வையிடமுடியும் எனவும் பயணிகள் மிகவும் இலகுவாக ஆசன முன்பதிவு செய்து கொள்ளமுடியும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் 1315 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் இந்த சேவையை பெற முடியும் எனவும் 2,500 வழித்தடங்கள் உட்பட 400 நீண்ட தூர பேருந்துகள் இந்த அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.