அமைச்சர் நசீர் அஹமட் பயணம் செய்த ஹெலி அவசரத் தரையிறக்கம்

73

சுற்றாடல் அமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட் நுவரெலியா நோக்கி பயணம் செய்த ஹெலிகொப்டர் மோசமான வானிலை காரணமாக கொத்மலை காமினி திசாநாயக்க தேசிய பாடசாலை மைதானத்தில் இன்று காலை திடீரென தரையிறக்கப்பட்டது.

மழையினால் கொத்மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளதால், ஹெலி தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், அமைச்சரும் விமானியும் சுமார் 45 நிமிடங்கள் விமானத்தில் தங்கியிருந்தனர்.

நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சீரானதையடுத்து , நுவரெலியாவிலிருந்து பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளையும் ஏற்றிக்கொண்டு ஹெலிகொப்டர் மட்டக்களப்புக்கு புறப்பட்டுச் சென்றதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர்.

Join Our WhatsApp Group