மல்லாவி பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞனை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் வவுனிக்குளம், பாலி நகரைச் சேர்ந்த எம்.திலக்ஷன் என்ற 23 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞன், உறவினர்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவரை சுட்டதற்கான காரணம் குறித்தும், அவரை சுட வந்தவர்கள் குறித்தும் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. மல்லாவி பொலிஸார் சந்தேகநபர்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டதுடன் அவர்களைக் கைது செய்வதற்கான விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.