வட இந்தியாவில் அடைமழை – மாண்டோர் எண்ணிக்கை 22ஆக உயர்வு

14

வட இந்தியாவில் அடைமழை காரணமாக மாண்டவர் எண்ணிக்கை 22க்கு உயர்ந்திருக்கிறது.வார இறுதியில் பெய்த கடும்மழையைத் தொடர்ந்து தலைநகர் புதுடில்லியில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன.40 ஆண்டில் பார்க்காத மழையைப் புதுடில்லி சந்தித்தது.

இமயமலையை ஒட்டிய மாநிலங்களான இமாசலப் பிரதேசத்திலும் உத்தரகாண்டிலும் வீடுகளைவிட்டு வெளியே செல்வதை இயன்றவரை தவிர்க்கும்படிப் பொது மக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

இமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் (Himachal Pradesh, Uttarkhand, Uttar Pradesh, Jammu-Kashmir, Punjab) ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் குறைந்தது 22 பேர் மாண்டதாக Times of India ஏடு கூறியது.

Join Our WhatsApp Group