மின் கட்டண உயர்வால் விவசாய நடவடிக்கையை தங்களால் முன்னெடுக்க முடியவில்லை என கந்தளாய் பிரதேச விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மின் கட்டண உயர்வின் பின்னர் மாதாந்தம் 25,000 ரூபாய் அறவிடப்பட்ட நிலையில் தற்போது 15,000 ரூபாய் அறவிடப்படுகின்றதாக தெரிவித்துள்ளனர்.
விவசாயத்தில் ஒரு காலத்திலும் இவ்வாறான நெருக்கடியை நாங்கள் எதிர்நோக்கியதில்லை என தெரிவித்ததோடு, இந்நிலையில் தமது வாலவாதாரத்தை கொண்டு நடத்துவதற்கு முடியாத நிலை ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை, மின் கட்டண அதிகரிப்பு காரணமாக உளுந்து, கச்சான் பயிர்ச்செய்கைகளை கைவிட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தி பயிர்ச்செய்கை மேற்கொள்ள உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.