மற்றும் ஒரு பேருந்து விபத்து – இருவர் பலி

19

அம்பன்பொல பிரதேசத்தில் இன்று (10) காலை இடம்பெற்ற மற்றுமொரு பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

கூரகலவிற்கு யாத்திரைச் சென்று மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த யாத்திரைகள் பயணித்த பேருந்து ஒன்று அம்பன்பொல பிரதேசத்தில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பொலன்னறுவை, மனம்பிட்டிய, கொட்டலிய பாலத்தில் மோதி பேருந்து கவிழ்ந்து நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதுடன் 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.அதேநேரம், பூண்டுலோயா, துனுகெதெனிய – மடகும்புர வீதியின் வளைவில் நேற்று மாலை பேருந்து ஒன்று 50 சுமார் அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்தனர்.

Join Our WhatsApp Group