மன்னம்பிட்டி பஸ் விபத்தில் ஒலுவிலைச் சேர்ந்த ஊடக நண்பர் றபீயுடீன் இஜாஸ் என்பவரும் உயிர் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் இன்னும் பொலனறுவை ஆஸ்பத்திரியிலேயே வைக்கப்பட்டுள்ளன.
விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன. ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ள சடலங்களை அடையாளம் காணும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
