மன்னம்பிட்டி பாலத்தில் பஸ் கவிழ்ந்தது எப்படி?…உயிர் தப்பியவர் உருக்கம் (வீடியோ)

93

பொலன்னறுவை மன்னம்பிட்டிய பிரதேசத்தில் கொட்டலிய பாலத்தில் தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து மோதி ஓடைக்குள் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 41 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கதுருவெலயில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த இந்த பேருந்து கொட்டாலியா ஓயாவில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து , ஓடையில் கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதுடன், காயமடைந்த 41 பேர் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

(நன்றி- அத தெரண.)

இதேவேளை, விபத்தில் உயிர் தப்பிய இளைஞர் ஒருவர் சம்பவம் தொடர்பில் மிகவும் உருக்கமாக கூறியதாவது ; “கதுருவெலயிலிருந்து கல்முனைக்கு பேருந்து பயணிக்கவிருந்தது. சுமார் 50 பேர் இருந்தனர். சுமார் பத்து பேர் நின்றிருந்தனர். 7.30 மணியளவில் பேருந்து புறப்பட்டது. மின்னல் வேகத்தில் பயணித்தது. பாலத்தை நெருங்கும் போது திடீரென நின்ற பேருந்து பின்னர் ஆற்றில் விழுந்தது. நான் ஜன்னல் ஓரத்தில் இருந்தேன். நான்தான் முதலில் வெளியே வந்தேன். பலர் மயக்கமடைந்திருந்தனா். 5 முதல் 10 நிமிடங்களில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்ததனர். என கூறினார்.

Join Our WhatsApp Group