புத்தளத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பேருந்து விபத்து

24

புத்தளத்திலிருந்து – நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளத்திலிருந்து-நுவரெலியாவுக்கு சுற்றுலாவுக்குச் சென்ற சிலரே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்தவர்களில் நால்வர் கொத்மலை பிராந்திய வைத்தியசாலையிலும் மேலும் நால்வர் புஸ்ஸல்லாவ வஹுகபிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Join Our WhatsApp Group