பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தாக்கல் செய்த மனு 17 இல் பரிசீலனைக்கு

49

தன்னை இடமாற்றம் செய்வதற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்ற உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஜூலை 17 ஆம் திகதி பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரியந்த ஜயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு திங்கட்கிழமை (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதனையடுத்தே   இது தொடர்பான  மனுவை  ஜுலை 17 ஆம்  திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள  நீதிமன்றம் உத்தரவிட்டது.

Join Our WhatsApp Group