நாட்டில் ஆண்களிடையே அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய்த்தொற்று!

23

நாட்டில் எய்ட்ஸ் பாதிப்பானது பெண்களை விட ஆண்களிடையே, ஏழு மடங்கு அதிகமாக காணப்படுவதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையில் 25 புதிய எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக நிகழ்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த வருடத்தில் மொத்தம் 607 புதிய எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இந்த நோய்த்தொற்றின் அதிகரிப்பானது முந்தைய ஆண்டை விட 44% அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆண்களுக்கிடையிலான ஓரினச்சேர்க்கை உறவுகள் இந்தப் போக்கிற்கு நேரடியாகப் பங்களித்துள்ளதாக ஜானகி விதானபத்திரனவ சுட்டிக்காட்டியுள்ளார்.

Join Our WhatsApp Group